எரிபொருள் கோட்டா குறித்து புதிய தீர்மானம்

அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது.

Mar 8, 2023 - 16:53
எரிபொருள் கோட்டா குறித்து புதிய தீர்மானம்

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் எரிபொருள் கோட்டா புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், QR கோட்டா மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் தனது  ட்வீட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்