ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் திடீர் விஜயம்

இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.

மே 31, 2025 - 14:52
ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் திடீர் விஜயம்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!