அனர்த்த நிலைமை: அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து
நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து சுகாதார ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், நோயாளி பராமரிப்பு பாதிக்கப்படாத வகையில் விடுமுறைகள் கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.