ஜனவரி 28 ஆம் திகதிக்குள் ரணிலின் விசாரணைகளை முடிக்குமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த வழக்கை ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்த வழக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்ற அவமதிப்பு ஏதேனும் இருந்தால், தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கில் தலையிடும் வகையில் யாராவது நடந்து கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
வழக்கில் ஆஜராவதற்காக இன்று பிற்பகல் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்திற்கு வந்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, மேலதிக விசாரணைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெறுவது அவசியம் என்று கூறினார்.