முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏப்ரல் 9 – ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இந்த கைது மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
விசாரணையின் தன்மை அல்லது குற்றச்சாட்டுகள் பற்றிய மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.