முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

மந்திரியாறு நீரோடை பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த நபர், முதலையால்  இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலையால் இழுத்துச் சென்ற நபரின் சடலம், இரண்டு நாட்களின் பின்னர் இன்று ( மே 22 ) மீட்கப்பட்டுள்ளது.

மந்திரியாறு நீரோடை பகுதியில்  செவ்வாய்க்கிழமை ( மே 20) மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது குறித்த நபர், முதலையால்  இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும், கடந்த இரு நாட்களாக உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தேடிவந்த நிலையில், இன்று  காலை அவர், இடுப்புக்கு கீழ் பகுதியற்ற நிலையில்  சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT