வங்கி பரிவர்த்தனை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்த தம்பதி கைது!

கடந்த மூன்று மாதங்களாக அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வங்கி பரிவர்த்தனை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்த தம்பதி கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமான முறையில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரி றபாய்டீனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கணவன்-மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். 
அத்துடன், போதைப்பொருளை வாங்க வந்திருந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த மாணவர் ரூ.12,000 செலுத்தி, ஐஸ் போதைப்பொருளைப் பெறுவதற்காக வந்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 42 வயதுடைய தம்பதியினர், தோட்டத் தொழிலாளர்கள் என்ற போர்வையில் கடந்த ஆறு மாதங்களாக சம்மாந்துறை 40 வீட்டு திட்டப் பகுதியில் தங்கியிருந்து ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த மூன்று மாதங்களாக அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து தனியார் வங்கிகள் ஊடாக ரூ.10,000 பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளனர். வங்கியில் பணம் வைப்பு செய்யப்பட்டதும், அதற்கான தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் அவர்களது கையடக்கத் தொலைபேசிக்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உடனடியாக போதைப்பொருள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சோதனையின் போது சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கையடக்கத் தொலைபேசிகள், பல்வேறு அளவுகளில் ஐஸ் போதைப்பொருள், வங்கிப் புத்தகம் மற்றும் பணம் செலுத்தப்பட்டதற்கான வங்கி ரசீதுகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூவரும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது கணவன் மற்றும் பல்கலைக்கழக மாணவருக்கு தலா ரூ.9,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், பெண் சந்தேகநபர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாறுக் ஷிஹான்

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT