அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ரூபாயின் பெறுமதி அதிகரிப்பால் தற்போது இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும், டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பயனை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என இறக்குமதியாளர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், ஒரு கிலோகிலோகிராம் சீனி 25 - 30 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. வெங்காயம், பருப்பு, கிழங்கு என்பவற்றின் விலைகளும் குறைந்துள்ளன.
எனவே பண்டிகைக் காலத்தில் மேலும் விலைகள் குறைந்து நுகர்வோர் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வாயப்பு கிடைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.