அஜித்தின் அடுத்த படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!
அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த குட் பேட் அக்லி படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த குட் பேட் அக்லி படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
AK 64 படத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் சுமார் ரூ. 260 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், AK 64 திரைப்படத்தில், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிரடி அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தற்போது, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.