இந்தியாவில் இருந்து இலண்டன் நோக்கி 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஜுன் 12, 2025 - 19:35
இந்தியாவில் இருந்து இலண்டன் நோக்கி 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

 ஏர் இந்தியா 171  (ஏஐ171 - AI 171) என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி வியாழக்கிழமை மதியம் 1.10 மணி அளவில் புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. 

விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்த இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்து கவலை எழுந்துள்ளது.

விபத்தை அடுத்து அப்பகுதியில் இருந்து கரும்புகை பெருமளவில் வெளியாகி வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 

இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து ஒன்பதரை மணி நேரம் பயணித்து இலண்டன் செல்லக்கூடியது என்பதால், விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 

விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பிடித்தது என்றும், தீ அணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன என்றும் தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் கடியா தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!