டாம் குரூஸுடன் 'பெருசு' பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் மிஷன் 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்' பட பிரீமியர் ஷோவில் நிஹாரிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பெருசு' படத்தில் சமூக வலைதள பரபலம் நிஹாரிகா கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 3 படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்தநிலையில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் மிஷன் 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்' பட பிரீமியர் ஷோவில் நிஹாரிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது, டாம் குரூஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிஹாரிகா, கனவில் கூட இப்படி நடக்கும் என்று நினைக்க தைரியம் இல்லாத எனக்கு, அதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி என்று நெகிழ்ந்திருக்கிறார்.