எஜமானால் துஷ்பிரயோகம் - யுவதி பொலிஸில் தஞ்சம்

குறித்த யுவதி அந்த வீட்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த தரகர் மூலம் கொழும்புக்கு வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.

Mar 6, 2023 - 13:37
எஜமானால் துஷ்பிரயோகம் - யுவதி பொலிஸில் தஞ்சம்

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியை பாலியல்  வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக  மொறட்டுவ பொலிஸாருக்கு முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த யுவதி அந்த வீட்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த தரகர் மூலம் கொழும்புக்கு வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.

அந்த வீட்டில் உள்ளவர்கள் விடுமுறையை கழிக்க வெளியில் சென்ற வேளையிலே 60 வயதுடைய சந்தேக நபர் யுவதியை இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபரின் பிடியில் இருந்து இரவு 11 மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறிய யுவதி, பாதையில் செல்பவர்களிடம் விவரத்தை தெரிவித்து பொலிஸாரின் உதவியை பெற்றுள்ளார்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்