துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் கைது!

மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய சந்தேகநபர், அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரை, இன்று (07) அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். 

துருக்கி செல்வதற்காக வந்த குறித்த நபரின் பயணப் பொதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்நபரை விமான நிலைய பொலிஸார் கைது செய்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய சந்தேகநபர், அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அங்கு விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT