இந்த வருடத்தில் வீதி விபத்துகளில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர்

2025 ஆம் ஆண்டில் இதுவரை, 944 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துகளில் 1007 பேர் இறந்துள்ளனர்.

மே 19, 2025 - 22:47
இந்த வருடத்தில் வீதி விபத்துகளில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர்

2025 ஆம் ஆண்டில் இதுவரை, 944 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துகளில் 1007 பேர் இறந்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்து விபத்துக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்வது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, ஜனவரி 1 முதல் மே 18 வரை 26,413 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!