பூண்டுலோயாவில் 17 குடியிருப்புகள் தீக்கிரை;70 பேர் தஞ்சம்

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 17, 2024 - 16:35
பூண்டுலோயாவில் 17 குடியிருப்புகள் தீக்கிரை;70 பேர் தஞ்சம்

பூண்டுலோயா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கொத்மலை பிரதேச சபையினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

தீ பற்றியதையடுத்து வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து, பூண்டுலோயா பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், 17 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் 

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் பூண்டுலோயா பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!