மின்சார சபையின் தலைவர் இராஜினாமா; நடந்தது என்ன?

அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜுன் 13, 2022 - 21:36
ஜுன் 14, 2022 - 14:22
மின்சார சபையின் தலைவர் இராஜினாமா; நடந்தது என்ன?

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

இதனையடுத்து,  அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் அவர் இன்று(13) இதனைக் கூறினார்.

மேலும், இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நலிந்த இளங்கோகோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இவர் முன்னதாக கூறியிருந்தார்.

இருப்பினும் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!