ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்கவுள்ளதாக தகவல்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியிடுவதுடன், அதில் வெற்றிபெற்று 2030 வரை ஜனாதிபதியாக செயற்படுவார் என பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 31, 2023 - 14:39
ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்கவுள்ளதாக தகவல்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அவர் போட்டியிடுவதுடன், அதில் வெற்றிபெற்று 2030 வரை ஜனாதிபதியாக செயற்படுவார் என பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின்  உறுப்பினர்களும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!