சேற்று உரம் நாட்டை வந்தடைந்தது
பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரம் என்று அழைக்கப்படும் ரிஎஸ்பி உரத்தை கொண்டுவந்த கப்பல், வியாழக்கிழமை (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரம் என்று அழைக்கப்படும் ரிஎஸ்பி உரத்தை கொண்டுவந்த கப்பல், வியாழக்கிழமை (16) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலில் 36, 000 மெட்ரிக் தொன் உரம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு கப்பலும் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் யுஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவியின் கீழ், குறித்த ரிஎஸ்பி உரம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த உரத் தொகையை நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதற்கிணங்க, ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோகிராம் உரம் விநியோகிக்க உள்ளதாகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த உரத் தொகையை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்தது.