சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரிப்பு
நாட்டில், 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில், 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் மந்தபோசன நிலை 15.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பணியகத்தின் சமூக வைத்தியர் கௌசல்யா கஸ்தூரிஆரச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் உட்பட்ட சிறார்களின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.