இ.தொ.கா நுவரெலியாவில் ஆறு சபைகள் சேவல் சின்னத்தில் 

இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இன்று (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன.

ஜனவரி 21, 2023 - 21:25
ஜனவரி 22, 2023 - 13:26
இ.தொ.கா நுவரெலியாவில் ஆறு சபைகள் சேவல் சின்னத்தில் 

(க.கிஷாந்தன்)

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.

இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இன்று (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன.

இதன்படி நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளுக்கும், தலவாக்கலை - லிந்துலை நகர சபைக்கும் சேவல் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.

அத்துடன், நுவரெலியா மாநகரசபை, அட்டன் - டிக்கோயா நகரசபை, அம்பகமுவ பிரதேச சபை, வலப்பனை பிரதேச சபை மற்றும் கொத்மலை பிரதேச சபை, ஹங்குராங்கெத்த பிரதேச சபை ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!