யாழில் குடும்பஸ்தர் கொலை - மனைவி உட்பட 11 பேர் கைது
கடந்த சனிக்கிழமை இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடாத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, அவரது உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடாத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.