பாண் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
“கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாயால் குறைத்தன. இதனையடுத்து 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.