விமானப் படையின் புதிய தளபதியாக உதேனி ராஜபக்‌ஷ நியமனம்

ஜுன் 29, 2023 - 19:29
விமானப் படையின் புதிய தளபதியாக உதேனி ராஜபக்‌ஷ நியமனம்

நாளை (30) முதல் அமுலுக்கு வரும் வகையில், விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனக் கடிதம்,  ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது.

வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச, இந்நாட்டின் 19ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில், அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் என்ற வகையில், ஆனந்த கல்லூரியில் உருவான முதலாவது விமானப் படைத் தளபதியாகவும் கருதப்படுவார்.

1988ஆம் ஆண்டில் பயிலுநராக கொத்தலால பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துக்கொண்டதோடு, அநுராதபுரம் முகாமில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், முதலாம் இலக்க 33ஆவது விமானப்படை பயிற்சி பாடநெறியில் பங்குபற்றி பாடநெறியின் மிகச்சிறந்த பயிலுநராகவும் தெரிவு செய்யப்பட்டார். 

விமானப்படை தளபதியாக நியமனம் பெறுவதற்கு முன்பாக அவர் விமானப்படையின் இரண்டாம் நிலை அதிகாரியாக நியமனம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!