33 மணி நேரம் படுத்திருந்தே “உலகின் சோம்பேறி மனிதன்” பட்டம் வென்ற நபர்
சீனாவின் உள்மங்கோலியா மாகாணம், பாடோ நகரில் நடைபெற்ற “உலகின் சோம்பேறி மனிதன்” பட்டத்திற்கான விசித்திரமான போட்டியில் ஒருவருக்கு ரூ.37,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் உள்மங்கோலியா மாகாணம், பாடோ நகரில் நடைபெற்ற “உலகின் சோம்பேறி மனிதன்” பட்டத்திற்கான விசித்திரமான போட்டியில் ஒருவருக்கு ரூ.37,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி காலை 10.18 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி, அடுத்த நாள் மாலை 7.53 மணி வரை நீடித்து, மொத்தம் 33 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் 240 பேர் பங்கேற்றனர்; ஒவ்வொருவருக்கும் தனித்தனி மெத்தைகள் வழங்கப்பட்டன.
போட்டியாளர்கள் படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் மொபைல் பயன்படுத்தலாம், புத்தகம் படிக்கலாம், உணவு உள்ளிட்ட தேவைகளை ஆர்டர் செய்யலாம் என சலுகைகள் அளிக்கப்பட்டன.
ஆனால், எழுந்து அமருதல், படுக்கையை விட்டு எழுந்து செல்வது, கழிப்பறைக்கு போவது எல்லாம் முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் சிலர் டயப்பர் பயன்பாட்டுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதல் 24 மணி நேரத்திலேயே 186 பேர் போட்டியில் இருந்து நுழைய முடியாமல் வெளியேற, இறுதி வரை 54 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இடைவேளையின்றி தொடர்ந்து 33 மணி நேரம் 35 நிமிடங்கள் படுத்திருந்த போட்டியாளர், “உலகின் மிகச் சோம்பேறி மனிதன்” பட்டத்தையும் 3000 யுவான் (சுமார் ₹37,488) பரிசையும் வென்றார்.