கில்மிஷாவை வீடு தேடிச் சென்று பாராட்டிய நீதி அமைச்சர்
அரியாலையில் உள்ள கில்மிஷாவின் வீட்டிற்கு சென்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராட்டினார்.

சீ தமிழில் ஒளிபரப்பான “சரிகமப லிட்டில் சம்பியன்” போட்டியில் வெற்றி பெற்ற கில்மிஷாவை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (16) மாலை சந்தித்துள்ளார்.
அரியாலையில் உள்ள கில்மிஷாவின் வீட்டிற்கு சென்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராட்டினார்.
கில்மிஷா இலங்கைக்கு வழங்கிய புகழைப் பாராட்டுவதாகவும், அவரது எதிர்கால கல்வி மற்றும் இசை வாழ்க்கையில் வெற்றிபெற ஆசீர்வாதங்களைத் தெரிவிப்பதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.