ஒரே நாளில் மோதிக் கொள்ளும் வாரிசு மற்றும் துணிவு

வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படம் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. 

ஜனவரி 5, 2023 - 20:24

பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திலிருந்து தமன் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்து படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இதனை வைரலாக்கி இணையதளத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!