30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியை பிடித்த சுக்கிரன்.. சொர்க்க வாழ்க்கை பெறும் 3 ராசிகள்!

புத்தாண்டு ராசிபலன் 2024: சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்கிறார். 

டிசம்பர் 16, 2023 - 13:03
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியை பிடித்த சுக்கிரன்.. சொர்க்க வாழ்க்கை பெறும் 3 ராசிகள்!

புத்தாண்டு ராசிபலன் 2024

2024 ஆம் ஆண்டு பல கிரகங்களின் மாற்றங்கள் நிகழ உள்ளன. ஆனால் வரும் புத்தாண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்கிறார். 

2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ள சனிபகவானோடு கும்ப ராசியில் சுக்கிர பகவானும் இணைந்து பயணிக்க உள்ளார். அதேபோல 30 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுடைய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. 

வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து பார்க்கலாம்.

மேஷ ராசி 

சனி மற்றும் சுக்கிரன் இணைப்பு உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. நன்மைகள் கட்டுக்கடங்காமல் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் எந்தவித குறைபாடும் இருக்காது. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும். இடத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

இதையும் படிங்க: புத்தாண்டு ராசிபலன் 2024: அள்ளித் தரும் சுக்ரன் மற்றும் செவ்வாய்...  மூன்று ராசிகளுக்கு பண மழை!

ரிஷப ராசி

சனி மற்றும் சுக்கிரன் மங்கள யோகத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றனர். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் லாபம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மகர ராசி 

இரண்டு கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு அதிக அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

சேமிப்பு அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கடினமாக உழைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். புதிய உறவுகள் உங்களைத் தேடி வரும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!