எலான் மஸ்கின் வரலாறு காணாத டிரில்லியன் டொலர் சம்பள கோரிக்கைக்கு ஒப்புதல்
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் சரித்திரத்திலேயே மிகப் பெரிய நிறுவன ஊதியத் திட்டத்திற்கு வியாழக்கிழமை அன்று பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் சரித்திரத்திலேயே மிகப் பெரிய நிறுவன ஊதியத் திட்டத்திற்கு வியாழக்கிழமை அன்று பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் மின்சார வாகனங்கள் உற்பத்தியாளரான டெஸ்லாவை ஒரு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் ஜாம்பவானாக மாற்றுவதற்கான மஸ்கின் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரித்துள்ளனர்.
இந்த முன்மொழிவு 75% க்கும் அதிகமான ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டது. டெக்சாஸில் உள்ள நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தின் மேடையில், மஸ்க் நடனமாடும் ரோபோக்களுடன் மகிழ்ச்சியாக காணப்பட்டார்.
ஏற்கனவே உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் 1 டிரில்லியன் வரை பங்குகளைப்பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்.
ஊதியம் மிக அதிகம் மற்றும் அநாவசியம் என்று சில முதலீட்டாளர்கள் கருதியபோதிலும், பல முதலீட்டாளர்கள் ஊதியத் திட்டம் மறுக்கப்பட்டால், அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறக்கூடும் என்று எச்சரித்தனர்.
தனது நிறுவனக் கூட்டத்தைப் பற்றி பேசிய மஸ்க், மற்ற பங்குதாரர் கூட்டங்கள் "தூக்க மாத்திரை போல" (snoozefests) இருப்பதாகவும், ஆனால் டெஸ்லாவின் கூட்டங்கள் "பீரங்கிகள் (bangers)" போல இருப்பதாகவும், இது "வியாதி (sick)" போல இருப்பதாகவும் குறிப்பிட்டார்.