ரயிலில் மோதி இளம்பெண் உயிரிழப்பு; கண்டியில் சம்பவம்
கண்டி, அஸ்கிரிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரயிலில் மோதி இளம்பெண் உயிரிழப்பு
கண்டி, அஸ்கிரிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
16 வயதுடைய குறித்த சிறுமி கல்வி வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
அம்பிட்டிய பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.