வவுனியா விபத்தில் விசேட அதிரடிப்படையினர் இருவர் பலி
வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து, நேற்று(09) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிக்குளம் பகுதியில் ஜீப் வண்டி பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.