இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதாந்த 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலங்களுக்கு வழங்குவதற்கு நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிணற்றில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கும் வாரியபொல பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.