தசாப்தங்களைக் கடந்து கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்!

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003 0/L மற்றும் 2006 A/L மாணவர்களின் முன்மாதிரியான இந்தச் செயற்றிட்டம் பலராலும் போற்றப்படுகின்றது.

தசாப்தங்களைக் கடந்து கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2006 க.பொ.த உயர்தரம் எழுதிய பழைய மாணவர்களால் தமக்கு தரம் ஒன்று தொடக்கம் 13 வரை கல்வி கற்பித்த ஆசிரியர்களை நன்றியுடன் ஞாபகப்படுத்துவதற்காக கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இதனை ஏற்பாடு செய்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக 2003 O/L மற்றும் 2006 A/L மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதன் விளைவாக கடந்த சனிக்கிழமை திஹாறிய அல்  அஸ்ஹர் மத்திய கல்லூரியின் இவ்வாறான ஒரு நிகழ்வினை நடத்துவதற்கு முடிந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமை ஆற்றி, தற்போது வேறு பாடசாலைகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும் கல்லூரியில் தற்போதும் கூட கடமையாற்றிக் கொண்டிருக்கக் கூடிய ஆசிரியர்களும்,  அதேபோல தற்போது ஓய்வு நிலையில் இருக்கக்கூடிய ஆசிரியர்களும் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் அன்றைய தினம் வருகை தந்திருந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கல்லூரியில் 2003 ஆம் ஆண்டு O/L மற்றும் 2006ஆம் ஆண்டு A/Lவகுப்புக்களில் கற்ற மாணவர்கள் நாட்டின் நாலா பகுதிகளிலும் இருந்து இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமது குடும்ப சகிதம் வருகை தந்திருந்தமை நிகழ்வினை மேலும் மெருகூட்டியது.

மேலும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த பழைய மாணவர்கள் அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற காலப்பகுதியில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் அதேபோன்று சிற்றூலியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு, ஞாபாகார்த்த சின்னம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003 0/L மற்றும் 2006 A/L மாணவர்களின் முன்மாதிரியான இந்தச் செயற்றிட்டம் பலராலும் போற்றப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT