கல்வி அமைச்சு முன்பாக விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பம்
புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியே, இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று திங்கட்கிழமை (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளாகத்தின் முன்பாக, இன்று காலை முதலே அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.