கிணற்றில் இருந்து தாய் - குழந்தை சடலங்கள் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கும் வாரியபொல பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

கிணற்றில் இருந்து தாய் - குழந்தை சடலங்கள் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வாரியபொல- வல்பொல பிரதேசத்தில் 6 வயதுக் குழந்தையும் அக்குழந்தையின் தாயும் கிணற்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர். 

குருநாகல் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம்.கோவித சாரமித் (வயத 06) மற்றும் தாயான லக்மாலி வீரசிங்க (வயது 37) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவர்கள் இருவரும், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாகவும் மாலை 6 மணிக்கு மேல் ஆகியும் இருவரையும் காணாத அயலவர்கள் கிணற்றின் அருகே சோதனையிட்ட போது,  குழந்தை மற்றும் தாயின் காலணிகள்,  உடைகள் என்பவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். 

இது தொடர்பில்  பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து, சோதனையிட்டபோது, கிணற்றுக்குள் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

கிணற்றில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கும் வாரியபொல பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT