கார் - வேன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி; 10 பேர் காயம்!
விபத்து நேர்ந்த போது காரில் பயணித்திருந்த இரண்டு பெண்களும், ஓர் ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தல், நவதன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை ஏற்பட்ட வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நேர்ந்த போது காரில் பயணித்திருந்த இரண்டு பெண்களும், ஓர் ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT