சோற்றுக்கு மட்டுமல்ல! அரிசியில் இருந்து பியர், வைன் தயாரிக்க அரசின் புதிய திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

புதிய கொள்கையின் கீழ், எதிர்காலத்தில் அரிசியை பயன்படுத்தி பியர், வைன், கால்நடைத் தீவனம், பிஸ்கட் மற்றும் கேக் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படவுள்ளன.
சோற்றுக்கு மட்டுமல்ல! அரிசியில் இருந்து பியர், வைன் தயாரிக்க அரசின் புதிய திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!
AI generated image
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் அரிசி பயன்பாட்டை உணவுக்காக மட்டுமே கட்டுப்படுத்தாமல், பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்தும் வகையில் புதிய கொள்கையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். 

கெபித்திகொல்லாவ பகுதியில் புதிய நீர்ப்பாசனத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் நாட்டில் நெல் உற்பத்தி குறைவாக இருந்ததால், அரிசியை பயன்படுத்தி பிற பொருட்கள் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தனது அரசாங்கம் நீக்கியுள்ளதாகக் கூறினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நெல் உபரி உற்பத்தி ஏற்படும் காலங்களில் விவசாயிகள் சந்திக்கும் விலை வீழ்ச்சி மற்றும் சந்தை நெருக்கடியைத் தவிர்க்கும் நோக்கிலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

புதிய கொள்கையின் கீழ், எதிர்காலத்தில் அரிசியை பயன்படுத்தி பியர், வைன், கால்நடைத் தீவனம், பிஸ்கட் மற்றும் கேக் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படவுள்ளன. இதன்மூலம் அரிசிக்கான உள்நாட்டு மற்றும் தொழில்துறை சந்தை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அறுவடைக்குப் பிந்தைய விரயத்தை குறைக்கும் நோக்கில் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரிசியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கக்கூடிய பல உணவு மற்றும் பானப் பொருட்களை ஏற்கெனவே உருவாக்கியுள்ளன என்றும், அவற்றை விரைவில் வணிக ரீதியாக சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த மாற்றத்தின் மூலம் நெல் கொள்வனவில் பாரம்பரிய அரிசி ஆலைகளுடன், பான உற்பத்தியாளர்கள், கால்நடைத் தீவன உற்பத்தியாளர்கள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டியுடன் சந்தையில் ஈடுபடுவார்கள். இதனால் விவசாயிகள் தங்களின் அறுவடைக்கு அதிக மற்றும் நியாயமான விலையைப் பெறும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சந்தை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு, நெல் சாகுபடியை விரிவுபடுத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விவசாயிகளிடம் அழைப்பு விடுத்தார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -