தாய்ப்பால் கொடுத்த இளம் தாய் பாலியல் வன்புணர்வு

சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பால் கொடுத்த இளம் தாய் பாலியல் வன்புணர்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வீடொன்றில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருந்த தாயை மிரட்டிய மூன்று இளைஞர்கள், தாயை பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பூகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

குழந்தையை தரையில் அடித்து கொலை செய்ய போவதாக மிரட்டியே இந்த குற்றத்தை அவர்கள் புரிந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தாய் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT