இலங்கையில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை!
தேங்காய் விலை இலங்கை சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் விலை இலங்கை சந்தையில் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாயாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
பெரிய தேங்காய் ஒன்று 100 தொடக்கம் 120 ரூபாய் வரையிலும், சிறிய அளவிலான தேங்காய் 85 தொடக்கம் 100 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.