ஒத்திவைக்கப்பட்ட 2025 GCE உயர்தரப் பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன. இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும், 32 பிராந்திய மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 12, 2026 - 07:51
ஒத்திவைக்கப்பட்ட 2025 GCE உயர்தரப் பரீட்சைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்ட பேரழிவு நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான GCE உயர்தர (A/L) பரீட்சைகளின் மீதமுள்ள பாடங்கள் இன்று (12) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன. பரீட்சைகள் ஜனவரி 20 வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இப்பரீட்சைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன. இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும், 32 பிராந்திய மையங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பேரழிவின் காரணமாக தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு போன்ற அடையாள ஆவணங்களை இழந்துள்ள பரீட்சார்த்திகள், தற்காலிக அடையாள ஆவணத்தை முன்வைத்து பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்படுவார்கள் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படியே பரீட்சை நேரங்கள் தொடரும் என்றும், பரீட்சை தொடங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் பரீட்சை மையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!