கொழும்பு முதல் புத்தளம் மற்றும் காங்கசந்துறை வழியாக திருகோணமலை வரையிலும், மேலும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 50–55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.
பாலர் பாடசாலைகள் உட்பட அனைத்து முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களுக்கும் நாளை (28) முதல் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.