சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்?
தனது சினிமா தொழிலில் உச்சத்தில் இருந்தபோது மதுபாலா திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார்.

ரோஜா படத்தில் நடித்த நடிகை மதுபாலா நடிகை ஹேமமாலினி மற்றும் ஜூஹி சாவ்லாவின் உறவினர் என்ற பின்னணி இருப்பினும் தனது திறமையான நடிப்பால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக மாறினார்.
தனது சினிமா தொழிலில் உச்சத்தில் இருந்தபோது மதுபாலா திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார்.
இந்நிலையில் மதுபாலாவின் இரட்டை மகள்களில் ஒருவர் சினிமா துறையில் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக மதுபாலா சமூக ஊடகங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
அவர் தனது மகள்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகியுள்ளன. அச்சு அசல் தாயைப் போல் மகள்கள் இருப்பதாக ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.
மதுபாலா அடுத்ததாக விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார் மற்றும் பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் "கண்ணப்பா" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மகள்களும் தாயின் வழியில் சினிமாவில் நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.