விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறாரா சிம்பு?
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நடிகர் சிலம்பரசன் இந்த வீடியோவை பகிர்ந்து, விராட் கோலியை “நீ சிங்கம் தான்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தினார்.

விராட் கோலி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், அப்போது, அவரிடம் சமீபத்தில் நீங்கள் அதிகமாக கேட்ட பாடல் என்ன? என்று கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த விராட்கோலி, சிம்பு நடித்த பத்து தல படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் அதிகம் கேட்பதாக கூறினார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நடிகர் சிலம்பரசன் இந்த வீடியோவை பகிர்ந்து, விராட் கோலியை “நீ சிங்கம் தான்” எனக் குறிப்பிட்டு வாழ்த்தினார்.
இந்த நிலையில், விராட் கோலியின் பயோபிக்கில் (வாழ்க்கை வரலாறு) நடிகர் சிலம்பரசன் நடிக்கப் உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் ரசிகர்களிடையே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு மற்றும் விராட் கோலி இருவருக்கும் தனித்துவமான தாடி ஸ்டைல்கள் இருப்பதாலும், சிலம்பரசன் தற்போது கச்சிதமான உடற்கட்டுடன், விராட் கோலியைப் போலவே தோற்றமளிப்பதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்துதான், தற்போது விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்ற செய்தி பரவி வருகின்றது.