ஐசிசி வெளியிட்ட ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் ஒருவர் கூட இந்திய வீரர் இல்லை!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான தொடரும் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலில் மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மாதம் தோறும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை வைத்து அதில் சிறந்து செயல்பட்ட வீரர்கள் யார் என்று ஐசிசி மாதாந்தம் அறிவிக்கிறது. இஜூன் மாதம் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஆசஸ் தொடர் ஆகியவை இருந்தது.
மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான தொடரும் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலில் மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இடம் பெற்றுள்ளார். 29 வயதான டிராவிஸ் ஹெட் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சராசரியாக 55 வைத்திருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்து அசத்திய ட்ராவிஸ் ஹெட், ஆசஸ் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
பிரிட்டன் குடியுரிமை பெறும் பாக்கிஸ்தான் வீரர் .. அடுத்த ஐபிஎல்-இல் பங்கேற்பாரா?
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை ஜிம்பாப்வே வீரர் ஷேன் வில்லியம்ஸ் பெற்று இருக்கிறார். இவர் நேபாளம், அமெரிக்கா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு இடையே மூன்று சதம் அடித்திருக்கிறார்.
உலகக் கோப்பை தகுதி சுற்றில் 100 ரன்களுக்கு மேல் பேட்டிங் சராசரி வைத்திருக்கும் சேன் வில்லியம்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த தொடரில் அவர் 700 ரன்கள் விளாசி இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை வீரர் ஹசரங்க. 25 வயதான ஹசரங்கா உலகக்கோப்பை தகுதி சுற்றில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். மேலும் தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஹசரங்க அசத்திருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ்க்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் தான் இந்த பரிந்துரை பட்டியலில் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.