லிந்துலை லயன் குடியிருப்பில் தீ பரவல்
தலவாக்கலை, லிந்துல பொலிஸ் பிரிவில் உள்ள மிளகுசேனை தோட்டத்தில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.

தலவாக்கலை, லிந்துல பொலிஸ் பிரிவில் உள்ள மிளகுசேனை தோட்டத்தில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.
முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 4 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ளன.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் இருந்த பொருட்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.