மாயமான 20 வயது பெண் காருடன் சடலமாக மீட்பு – மரணம் விபத்து என உறுதி

நான்கு நாட்களுக்குப் பிறகு, ஒரு கால்வாயில் பகுதியளவு நீரில் மூழ்கியிருந்த கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் இருந்த சடலம் உடனடியாக அடையாளம் காணப்படாத நிலையில், பின்னர் கெய்லி ரஸ்ஸல் என உறுதிப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 10, 2025 - 06:20
மாயமான 20 வயது பெண் காருடன் சடலமாக மீட்பு – மரணம் விபத்து என உறுதி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கெய்லி ரஸ்ஸல் (Kylie Russell) காணாமல் போன நிலையில், கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அவரது காருடன் ஒரு கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கெய்லி, கடந்த நவம்பர் 30 ஆம் தேதி, தனது தந்தையை Park-N-Ride இடத்தில் இறக்கிவிட்டு, தனது நண்பரின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி பயணத்தை மேற்கொண்டார். அதன் பிறகு அவரது தொலைபேசியிலிருந்து எந்த செயல்பாடும் பதிவாகவில்லை. இதனால், உடனடியாக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, ஒரு கால்வாயில் பகுதியளவு நீரில் மூழ்கியிருந்த கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள் இருந்த சடலம் உடனடியாக அடையாளம் காணப்படாத நிலையில், பின்னர் கெய்லி ரஸ்ஸல் என உறுதிப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கையின்படி, கெய்லி நவம்பர் 30 ஆம் தேதியே இறந்துவிட்டார். அவரது மரணம் வாகன விபத்து காரணமாக ஏற்பட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கெய்லியின் குடும்பத்தினர், GoFundMe மூலம் அவருக்கான இறுதிச் சடங்கு மற்றும் செலவுகளுக்காக 28,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு, இதுவரை 24,000 டாலருக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளனர். சமூகம் முழுவதும் கெய்லியின் மரணத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!