நேபாள அணியை 167 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. 

ஜுன் 24, 2023 - 22:45
நேபாள அணியை 167 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
Image Source: Google

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. 

இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. 

எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று நடைபெற்றுவரும் 14ஆவது நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் தொடக்க வீரர் ஆசிஃப் ஷேக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏற்றமற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து குஷார் புர்டல் 27, பீம் ஷார்கி 22, ஆரிஃப் ஷேக் 6 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோஹித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற 33 ரன்களை எடுத்திருந்த கேப்டன் ரோஹித்தும் விக்கெட்டை இழந்தார். 

இதனால் 44.3 ஓவர்களில் நேபாள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளையும், பாஸ் டீ லீட், விக்ரம்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.   

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!