சதம் விளாசிய அத்தபத்து; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

ஜுன் 28, 2023 - 10:56
சதம் விளாசிய அத்தபத்து; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
Image Source: Google

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று காலியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சூஸி பேட்ஸ் 28 ரன்களிலும், பெர்னடைன் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதற்கிடையில் மழை காரணமாக ஆட்டம் 28 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய மெலி கெர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 40 ரன்களில் மெலி கெர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் சோபி டிவைன் 19 ரன்களுக்கும், மேடி க்ரீன் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 28 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் சாமரி அத்தபத்து - விஷ்மி கருணரத்ன இணை அபாரமான தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்தனர். 

இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியும் வெற்றியை நோக்கி நகர்ந்தது. பின் 50 ரன்களில் விஷ்மி கருணரத்ன ஆட்டமிழந்தார்.

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாமரி அத்தபத்து சதமடித்ததுடன், 11 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 111 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் இலங்கை அணி 27 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!