பிரித்தானியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபர்
பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கியுள்ள நிலையில், இத்தகைய மோசடிகளின் இலக்காக பலர் ஆகின்றனர்.
பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, ஒரு நபரிடம் 3 கோடி 69 இலட்சத்துக்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயது சந்தேக நபர் ஒருவர் யாழ் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தொகை கையொப்பமிடப்பட்டு வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டதாகவும், அதன் மூலம் பெரும் அளவிலான மோசடி நடைபெற்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கியுள்ள நிலையில், இத்தகைய மோசடிகளின் இலக்காக பலர் ஆகின்றனர்.
குறிப்பாக, வெளிநாட்டு வேலை என்ற ஆசையில் பெருந்தொகை பணத்தை செலவழித்து ஏமாறும் நபர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.