யாழ்ப்பாணத்தில் டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தை டீசலை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தை டீசலை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது.
ஒரு வயது ஒன்பது மாதங்கள் நிரம்பிய குழந்தையே நேற்று (22) இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி குழந்தையின் தந்தை லான்ட்மஸ்டர் திருத்த வேலையில் ஈடுபட்டுள்ளதுடன், டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதன்போது அங்கு வந்த குழந்தை குளிர்பானம் என நினைத்து டீசலை அருந்தியதுடன், குழந்தை மயக்கமுற்றதையடுத்து பின்னர் குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பின்னர், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (22) அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.