ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. 

ஜுலை 4, 2023 - 00:46
ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்
Image Source: Google

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. 

காயத்திலும் பேட்டிங் செய்த லயன் 13 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பேட் செய்ததனால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 15 ரன்கள் கிடைத்தது. 

இதனால் ஆஸ்திரேலியா 370 ரன்கள் முன்னிலை பெற்று 43 ரன்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமான சுழல் பந்து வீச்சாளராக திகழ்பவர் நாதன் லயன். 35 வதாகும் லயன் டெஸ்டில் 496 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து நாதன் லையன் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த லயன் 101ஆவது போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாதன் லயனுக்கு பதிலாக இன்னும் யாரையும் அணியில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக டாட் மர்ப்பி நாதன் லையனுக்கு பதிலாக சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!